பயங்கரவாத தடைச் சட்டத்தை கொண்டு வருவது தொடர்பில் அமைச்சர் ஜி.எல். பீரிஸ், வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு விளக்கமளிப்பு!

Friday, April 29th, 2022

இலங்கையில் நடைமுறையிலுள்ள உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு சர்வதேச சமூகம் உள்ளிட்ட தரப்புக்களிடமிருந்து கடும் எதிர்ப்புக்கள் வெளியாகி வரும் நிலையில், பயங்கரவாத தடைச் சட்டத்தை கொண்டு வருவது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு விளக்கமளித்துள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தால் வடக்கு கிழக்கு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில், தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச கலந்துரையாடியதாகவும் அவர், இராஜதந்திரிகளுக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், மோதலுக்குப் பிந்தைய நல்லிணக்கம் மற்றும் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அரசாங்கம் அடைந்துள்ள முன்னேற்றம் தொடர்பில் விளக்கமளித்துள்ளார்.

ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை மேலும் வலுப்படுத்துவதில் இலங்கையின் முன்னேற்றம் தொடர்பிலும் அவர் கூறியுள்ளார்.

இதன்போது பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் அண்மைக் காலமாக மேற்கொள்ளப்பட்ட கணிசமான திருத்தங்கள் மற்றும் பயங்கரவாதத்தின் சமகால பரிமாணங்களுக்கு ஏற்ப அதனைக் கொண்டு வருவதற்கு விரிவான பயங்கரவாத தடைச் சட்டத்தை உருவாக்குவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


கௌதாரிமுனை மகாவித்தியாலய மாணவர்களது குடிநீர் பிரச்சினைக்கு தீர்வுகாண ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி நடவடிக...
எதிர்வரும் 21 ஆம் திகதிமுதல் சிறுவர்களுக்கான தடுப்பூசி செலுத்தப்படும் - இலங்கை சிறுவர்களுக்கான வைத...
தனியாரிடம் இருந்து 50 மெகா வோட் மின்சாரத்தை கொள்வனவு செய்ய நடவடிக்கை - இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணை...