எதிர்வரும் 21 ஆம் திகதிமுதல் சிறுவர்களுக்கான தடுப்பூசி செலுத்தப்படும் – இலங்கை சிறுவர்களுக்கான வைத்திய கல்லூரி தெரிவிப்பு!

Sunday, September 12th, 2021

நீண்ட கால நோய் தாக்கங்களை எதிர்நோக்கியுள்ள சிறுவர்களுக்கு கொவிட் தடுப்பூசியை செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சிறுவர்களுக்கான வைத்திய கல்லூரி தெரிவித்துள்ளது.

இதன்படி, குறித்த சிறார்களுக்கு எதிர்வரும் 21 ஆம் திகதிமுதல் பைசர் தடுப்பூசியை செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த கல்லூரி குறிப்பிட்டுள்ளது.

இந்த தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை கொழும்பு – பொரள்ளை ரிஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்படவுள்ளதைகவும் குறித்த கல்லூரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை

30 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் இதுவரை தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாத குறித்த வயது பிரிவைச் சேர்ந்தவர்கள் துரிதமாக தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை நாட்டில் ஒரு கோடி 5 இலட்சத்து 44 ஆயிரத்து 229 பேருக்கு இரண்டு தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

30 வயதிற்கு மேற்பட்ட 11.4 மில்லியன் பேரை இலக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நடவடிக்கையில், இதுவரை 10.54 மில்லியன் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: