பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் இணையவழி பாதுகாப்பு சட்டமூலங்கள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 03 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!
Thursday, September 28th, 2023
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் இணையவழி பாதுகாப்பு சட்டமூலங்கள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 03 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், இணையவழி அமைப்புகளின் பாதுகாப்பு தொடர்பான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் இணையவழி அமைப்புகளின் பாதுகாப்பு குறித்த ஆணைக்குழுவை நிறுவுவதற்கும் முன்மொழியப்பட்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும் 3 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி வரை நாடாளுமன்றம் கூடவுள்ளது.
இந்தநிலையில், பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டை விட்டு வெளியேறும் தொழில் நிபுணர்கள் மீதான ஒத்திவைப்பு வேளை விவாதம் எதிர்வரும் 6 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
000
Related posts:
|
|
|


