அரச மருத்து அதிகாரிகள் சங்கத்தின் விசேட மத்திய செயற்குழு கூட்டம்!

Monday, June 26th, 2017

அரச மருத்து அதிகாரிகள் சங்கத்தின் விசேட மத்திய செயற்குழு கூட்டம் இன்று இடம்பெறவுள்ளதுமலபே தனியார் மருத்துவ கல்லுரி தொடர்பில் ஜனாதிபதி செயலகம் நேற்று வெளியிட்ட அறிக்கை தொடர்பில் ஆராயும் பொருட்டே இந்த அவசர கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் அரசாங்கம் நிபந்தனைகளுடனான வர்த்தமாணி அறிவிப்பு விரைவில் வெளியிடப்படவுள்ளதாகவும் அந்த வர்த்தமானியில் அறிவிக்கப்படுகின்ற நிபந்தனைகளை நிறைவேற்றும் வரையில் சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வது நிறுத்தப்பட்டுள்ளதுடன், பட்டமளிப்பு நிறுத்திவைக்கப்படுவதாக ஜனாதிபதி செயலாளர் பி.பி.அபேகோன் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அத்துடன், சைட்டம் தனியார் கல்லூரி கற்கை நெறி மருத்துவ சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைக்கு அமைய ஒழுங்கமைத்தல் சைட்டம் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை உயர் நீதிமன்றத்திற்கு அறிவிப்பதற்கு சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற்றுக்கொள்ளுதல்,மற்றும் மருத்துவ கல்விக்கான மிகக் குறைந்த தரம் குறித்த வர்த்தமானி மற்றும் சைட்டம் நிறுவனம் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து சட்டமா அதிபரின் ஆலேசனைகளை பெற்றுக்கொள்ளுதல் போன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

இந்த நிலையிலேயே இந்த அறிக்கை தொடர்பில் ஆராயும் பொருட்டு இன்று அரச மருத்து அதிகாரிகள் சங்கத்தின் விசேட மத்திய செயற்குழு கூட்டம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: