பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கினால் முற்றாக அழித்தொழிக்கப்படும் -அமைச்சர் சரத்வீரசேகர எச்சரிக்கை!

நாட்டில் பயங்கரவாதமும் தீவிரவாதமும் மீண்டும் தலைதூக்கினால் அவை அடியோடு அழித்தொழிக்கப்படுமென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.
கண்டியில் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில் –
தேசிய பாதுகாப்பை உறுதி செய்து மக்கள் அச்சமும் சந்தேகமும் இன்றி வாழும் நிலையை உறுதி செய்யும் திறன் அரசாங்கத்திற்குள்ளது.
அத்துடன் பலவீனமான நிலையில் காணப்பட்ட புலனாய்வு பிரிவு கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னர் வலுப்படுத்தப்பட்டுள்ளது.
புலனாய்வு பிரிவினர் சமீபத்தில் பல வெற்றிகரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் போதைப்பொருள் கடத்தலை முறியடித்துள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
உள்ளூராட்சி தேர்தலை 2017 ஜூனுக்கு முன்னர் நடத்த முடியாது - இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்...
சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் கணனிமயம் - பரீட்சை திணைக்களம் !
அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு தொடர்பில் கண்காணிக்க விசேட வேலைத்திட்டம் - துறைசார் அமைச்சு த...
|
|