பயங்கரவாதத்தை எதிர்கொள்ள இலங்கையும் இந்தியாவும் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டியது அவசியம் – இந்தியப் பிரதமர் !

பயங்கரவாதத்தை வெற்றி கொள்வதற்கு இலங்கையும் இந்தியாவும் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டியது அவசியம் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்றதன் பின்னர் தாம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட வேளையில், தமக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு தொடர்பில் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.
இந்தியா எப்பொழுதும் இலங்கைக்காக முன்னிலையாகும். குறிப்பாக கடினமான நேரங்களில் இந்தியா இலங்கையுடன் ஒன்றாக இணைந்து செயற்படும் எனவும் இந்தியப் பிரதமர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
இலங்கைக்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் பிறைசி ஹட்ஸன் தலைமையிலான குழுவினர் யாழ். வருகை!
அமரர் அப்பாத்துரை விநாயகமூர்த்தியின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இறுதி அஞ்சலி!
2021 முதல் நாடளாவிய ரீதியில் சிறிய பொலித்தீன் பைகள் மற்றும் பிலாஸ்டிக் பைகளை தடை - மத்திய சுற்றுச்...
|
|