2021 முதல் நாடளாவிய ரீதியில் சிறிய பொலித்தீன் பைகள் மற்றும் பிலாஸ்டிக் பைகளை தடை – மத்திய சுற்றுச்சூழல் ஆணையம் தெரிவிப்பு!

Monday, August 24th, 2020

2021 ஆம் ஆண்டுமுதல் நாடளாவிய ரீதியில் சிறிய பொலித்தீன் பைகள் மற்றும் பிலாஸ்டிக் பைகளை தடை செய்யவும், அவற்றை விற்பனை செய்வதை தடுக்கவும் பாரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சிறிய பொலித்தீனு பைகளில் அடைக்கப்பட்டு இருக்கும் ஷாம்பு மற்றும் ஹேர் ஜெல், குடிபான வகைகள் மற்றும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் அடங்கிய பாக்கெட்டுகளை பயன்படுத்த தடை விதிக்கும் திட்டத்தை அமைச்சரவையில் சமர்ப்பிப்பதாக மத்திய சுற்றுச்சூழல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சுற்றுச்சூழலுக்கு விரிவான சேதத்தை ஏற்படுத்தும் இந்த ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தடை செய்யுமாறு CEA கோரியுள்ளது.

குளிர்பானங்களைக் கொண்ட சிறிய பிளாஸ்டிக் போத்தல்களின் பயன்பாடும் கட்டுப்படுத்தப்படும் என்று CEA இன் இயக்குநர் ஜெனரல் ஹேமந்த ஜெயசிங்க ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

பிளாஸ்டிக் தயிர் கரண்டி மற்றும் பிளாஸ்டிக் கிளிப்களுக்கு சாத்தியமான மாற்று வழிகளைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பையும் CEA கவனித்து வருகிறது.

சுற்றுச்சூழலுக்கு உகந்த பிளாஸ்டிக்கிற்கு பதிலாக காகிதங்ளை பயன்படுத்தலாம் என்று CEA இன் இயக்குநர் ஜெனரல் ஹேமந்த ஜெயசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் அடுத்த ஆண்டுமுதல் பிலாஸ்டிக் பொருள் பயன்பாட்டில் பாரிய மாற்றத்தை காணலாம் என நம்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: