பன்மடங்கு அதிகரித்த விலையில் விற்பனை செய்யப்பட்ட மரக்கறிகளின் விலைகள் மீண்டும் சடுதியாக வீழ்ச்சி!
Thursday, February 15th, 2024
நாட்டில் கடந்த சில மாதங்களாக பன்மடங்கு அதிகரித்த விலையில் விற்பனை செய்யப்பட்ட மரக்கறிகள் விலைகள் மீண்டும் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வாரம் 2,500 ரூபாயாக காணப்பட்ட ஒரு கிலோகிராம் கரட்டின் விலை தற்பொழுது வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், நேற்று (14) ஒரு கிலோகிராம் கரட்டின் விலை 600 ரூபாயாக பதிவாகியுள்ளது.
அத்துடன், ஒரு கிலோகிராம் போஞ்சியின் விலை 800 ரூபாயாகவும், ஒரு கிலோகிராம் லீக்ஸின் விலை 350 ரூபாயாகவும், கோவா மற்றும் பீட்ரூட் ஆகியவற்றின் விலை 400 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
அதேவேளை, ஒரு கிலோகிராம் பாகற்காய் 350 முதல் 400 ரூபாய் வரையிலும், பூசணிக்காய் 300 முதல் 350 ரூபாய் வரையிலும் விற்பனையாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
உதயங்க வீரதுங்கவுக்கு இன்டர்போல் பிடியாணை!
தரம் I அதிபராக பதவி உயர்த்தப்பட்டும் அதற்குரிய கடிதங்கள் கிடைக்கவில்லை!
வடக்கு, கிழக்கில் நிலவும் சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடிக்கும் – வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை!
|
|
|


