பதிவு செய்வதற்காக 150 கட்சிகள் விண்ணப்பம் – சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் சட்ட பணிப்பாளர் தகவல்!
Wednesday, September 2nd, 2020
2020 ஆண்டுக்கான அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்காக 150 கட்சிகள் விண்ணப்பித்துள்ளன என சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் சட்ட பணிப்பாளர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
விண்ணப்பிக்கப்பட்டுள்ள 150 கட்சிகளில் 70 கட்சிகள் ஏற்கனவே உள்ளவை என அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், விண்ணப்பித்துள்ள கட்சிகளில் 40 விண்ணப்பங்கள் அடிப்படை ஆவணங்களைக் கூட பூர்த்தி செய்யாமையில் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
விண்ணப்பித்துள்ள கட்சிகளினால் ஒப்படைக்கப்பட்டுள்ள ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் நேர்முகத்தேர்வினை நடத்தி கட்சிகள் பதிவு செய்யப்பட்டதன் பின்னர் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் விபரங்களை ஆணைக்குழு வெளியிடும் எனவும் நிமல் புஞ்சிஹேவா சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
2935 ஏக்கர் நிலப்பரப்பில் கிளிநொச்சியில் சிறுபோக நெற்செய்கை!
யாழில் 39 மருத்துவர்களுக்கு நியமனம்!
குறைந்தளவான விளைச்சல் கிடைக்கப்பெறும் விவசாயிகளுக்கு மாத்திரம் இழப்பீடு - விவசாய அமைச்சர் மகிந்தானந்...
|
|
|


