குறைந்தளவான விளைச்சல் கிடைக்கப்பெறும் விவசாயிகளுக்கு மாத்திரம் இழப்பீடு – விவசாய அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே அறிவிப்பு!

Monday, January 3rd, 2022

அரசாங்கத்தினால் அனுமதிக்கப்பட்ட சேதன பசளையை மாத்திரம் பயன்படுத்தி, பயிரப்பட்டு அதில் குறைந்தளவான விளைச்சல் கிடைக்கப்பெறும் விவசாயிகளுக்கு மாத்திரம் இழப்பீடு வழங்கப்படும் என விவசாய அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் அவர் ஊடகங்களுக்கு இதனைக் குறிப்பிட்டார்.

4 வகையான உரங்கள் தற்போது விவசாயிகளுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளது. அதனை அவர்கள் பயன்படுத்தியுள்ளனரா என்பது தொடர்பில் கண்காணித்ததன் பின்னரே இழப்பீடு வழங்கப்படும்.

அதேநேரம், பசுமை விவசாய திட்டத்தை அமுல்படுத்தும் வேலைத்திட்டத்தில் தமது அமைச்சின் அதிகாரிகள் முழுமையான ஆதரவினை வழங்கவில்லை அவர் குற்றம் சுமத்தியுள்ளார். 60 முதல் 70 சதவீத அதிகாரிகள் இதற்கான ஒத்துழைப்பை வழங்கவில்லை.

இரசாயன விவசாய மாபியாக்களினால் அவர்களுக்கு இலஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாகவும் விவசாய அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

.

Related posts: