ஊதியம் உயர்வுகோரும் தனியார் பஸ் ஊழியர்கள்!

Saturday, May 19th, 2018

எரிபொருள் விலையேற்றத்தைத் தொடர்ந்து பஸ் கட்டணம் 12.5 வீதமாக உயர்த்துவதற்கு அரசாங்கம் இணங்கியது. இதனையடுத்து தனியார் போக்குவரத்து பஸ் சாரதிகள் நடத்துனர்கள் தங்களுக்கான ஊதியத்தை 10 வீதத்தினால் அதிகரிக்குமாறு இலங்கை தனியார் பஸ் ஊழியர்கள் சங்கத்தினர் தனியார் பஸ் உரிமையாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கை தனியார் பஸ் ஊழியர் சங்கம் மேலும் இது குறித்து தெரிவிக்கையில் -0

பஸ் கட்டணத்தை 6.56 வீதத்தினால் அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டபோதும் பஸ் உரிமையாளர்கள் பணிபகிஷ்கரிப்பு போராட்டத்தில் குதிப்பதற்கு திட்டமிட்டிருந்தனர். நேற்றுமுன்தினம் அதிகாரிகளுக்கும் பஸ் உரிமையாளர் சங்கத்தினருக்குமிடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் 12.5 வீதத்தினால் கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் இணக்கம் தெரிவித்தது. பஸ் உரிமையாளர்களின் கோரிக்கைக்கு இணங்க அரசாங்கம் பஸ் கட்டணத்தை அதிகரிக்க முடியுமென்றால் பஸ் உரிமையாளர்கள் தங்கள் ஊழியர்களுக்கான ஊதியத்தையும் ஏன் அதிகரிக்கமுடியாது என கேள்வி எழுப்பியுள்ளனர்.

தனியார் பஸ் ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு இடம்பெறாதபட்சத்தில் பஸ் ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தில் இறங்கவுள்ளதாக இலங்கை தனியார் பஸ் ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts: