பதில் பொலிஸ் மா அதிபராக விக்ரமரட்ன நியமனம்!
Sunday, March 12th, 2017
பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர பங்களாதேஷ் சென்றுள்ளதால் விக்ரமரட்ன பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆசிய பொலிஸ் அதிகாரிகளின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர பங்களாதேஷ் சென்றுள்ளார்.
தெற்காசிய மற்றும் அண்டைய நாடுகளின் பொலிஸ் உயரதிகாரிகள் கலந்து கொள்ளும் இம்மாநாடு இன்று முதல் எதிர்வரும் 14ம் திகதி வரை இடம்பெறவுள்ளது. வன்முறை அச்சுறுத்தல், தீவிரவாதம் மற்றும் சர்வதேச குற்றச் செயல்களுக்கு எதிராக பிராந்திய ஒத்துழைப்பை அதிகரித்துக் கொள்வது இந்த மாநாட்டின் நோக்கமாகும்.
Related posts:
அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்து - குழந்தைகள் உட்பட 10 பேர் பலி!
பயங்கரவாத தடை சட்டத்தின் சரத்துக்களை சீரமைப்பதற்காக விசேட குழு நியமனம்!
மாடுகளை திருடும் நபர்களின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகும் - விவசாய அமைச்சு எச்சரிக்கை!
|
|
|


