பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் பதவிப்பிரமாணம்!

Friday, July 15th, 2022

பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்றுமுதல் சட்டரீதியாக ஜனாதிபதி பதவியிலிருந்து உத்தியோகபூர்வமாக விலகியதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்தார்.

சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து ஊடகங்களுக்கு விசேட அறிவிப்பை வெளியிட்டபோது, அவரின் இந்த அறிவிப்பு வெளியானது.

தற்போதுமுதல், புதிய ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கான அரசியலமைப்பு ரீதியான நடைமுறை இடம்பெறும்.

அந்த நடைமுறை நிறைவடையும் வரையில், ஜனாதிபதி பதவியின் அதிகாரங்கள், செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கும், நிறைவேற்றுவதற்கும் அரசியலமைப்புக்கு அமைய, பிரதமர் செயற்படுவார்.

புதிய ஜனாதிபதி தெரிவானது, கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுக்கு தாம் அறியப்படுத்தியதற்கு அமைய, இடம்பெறும் என சபாநாயகர் அறிவுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: