பதிலடி கொடுக்க தயார் – முற்றுகையிட்டுள்ள போர்க்கப்பல்கள் – சீனா அமெரிக்கா இடையே வலுக்கும் போர் பதற்றம்!

Friday, August 5th, 2022

சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி தாய்வான் சென்றதையடுத்து சீனா அமெரிக்கா இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

தாய்வானை சுற்றி அமெரிக்க, சீன போர்க்கப்பல்கள் முற்றுகையிட்டுள்ளதால் தென் சீன கடல் பகுதியில் போர் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் கடும் எதிர்ப்பையும் மீறி அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி ஒரு நாள் பயணமாக கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்க விமானப்படை விமானத்தில் தனது நாட்டு குழுவினருடன் தாய்வான் சென்றிருந்தார்.

இது குறித்து நான்சி பெலோசி கூறும்போது தாய்வானுடன் கொண்டுள்ள நட்புறவை பெருமையாகக் கருதுகிறோம்.

தாய்வானுக்கு அளித்த உறுதியை கைவிட மாட்டோம் என்பதை தெளிவுபடுத்துவதற்காக எங்கள் குழுவுக்கு வந்துள்ளது என்றார்,

இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மற்றும் ஒத்துழைப்பு மேலும் வலுவடையும் என தாய்வான் வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

அமெரிக்க அதிபருக்கு அடுத்த நிலையில் உயர் பதவியிலுள்ள அந்நாட்டு சபாநாயகர் தாய்வான் வந்தது கடந்த 25 ஆண்டுகளில் இதுவேமுதல் தடவையாகும். தாய்வானில் அனைத்துப் பிரதிநிதிகளையும் நான்சி பெலோசி சந்தித்து பேசியுள்ளார்.

நான்சி பெலோசியின் இந்த பயணம் சீனாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. தாய்வானுக்கு தனிநாடு என்ற அங்கீகாரத்தை அமெரிக்கா வழங்கியுள்ளதாக சீனா கருதுகிறது.

இதுகுறித்து சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி கூறும்போது அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசியின் தாய்வான் பயணம் கேலிக்கூத்தானது.

ஜனநாயகம் போன்ற போர்வையில் சீனாவின் இறையாண்மையை அமெரிக்கா மாறிவிட்டது சீனாவை அவமதிப்பவர்கள் தண்டிக்கப்படுவார் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் விளைவாக தாய்வான் கடற்பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல்கள் நேற்றுமுன்தினம் இருந்து சுற்றிவருகின்றன.

அதே நேரத்தில் சீன போர்க்கப்பல்கள் அந்த பகுதிக்கு சென்றுள்ளன. இதனால் குறித்த பகுதியில் போர் அச்சம் நிலவி வருகிறது.

இவ்விடயம் குறித்து சீன ராணுவம் கூறும்போது, நாங்கள் தயார் நிலையில் உள்ளோம் நான்சி பெலோசியின் பயணத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ராணுவ நடவடிக்கைகளை தொடங்குவோம். இது சீனாவின் இறையாண்மையை பாதுகாக்க அவசியமான நடவடிக்கை என தெரிவித்துள்ளது

Related posts: