சினோபெக் நிறுவனத்துடனான ஒப்பந்தம் கைச்சாத்து – ஜனாதிபதி ஊடகப்பிரிவு தகவல்!

Tuesday, May 23rd, 2023

இலங்கையில் பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்தல், சேமித்தல், விநியோகம் செய்வது தொடர்பில் சீனாவின் சினோபெக் நிறுவனத்துடனான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் பரிந்துரைகளைத் தொடர்ந்து, இலங்கையில் பெட்ரோலியப் பொருட்களின் இறக்குமதி, சேமிப்பு, விநியோகம் மற்றும் விற்பனை தொடர்பான இந்த நீண்ட கால ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

சினோபெக் ஃப்யூயல் ஒயில் லங்கா பிரைவேட் லிமிடெட் மற்றும் சீனா, சிங்கப்பூரில் உள்ள அதன் தாய் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகள் முடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பெற்றோலியப் பொருட்களை இறக்குமதி செய்தல், சேமித்தல், விநியோகித்தல் மற்றும் விற்பனை செய்தல் தொடர்பான நீண்ட கால ஒப்பந்தம் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து கைச்சாத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


வடமராட்சி கிழக்குக்கில் ஆசிரியர் பற்றாக்குறை: பின்னடிக்கின்றனர் என்கிறார் வலயப் பணிப்பாளர்!
முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளராக கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம...
சமையல் எரிவாயு கொள்கலனின் விலை அதிகரிப்பிற்கான கோரிக்கையை நிராகரித்தது நுகர்வோர் விவகார அதிகார சபை !