பதவி விலகும் இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா – எதிர்வரும் முதலாம் திகதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே புதிய இராணுவத் தளபதியாக பதவியேற்பு!

ஜெனரல் ஷவேந்திர சில்வா, எதிர்வரும் 31 ஆம் திகதி, இராணுவ தளபதி பதவியிலிருந்து விலகவுள்ளார் என இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.
இதேவேளை புதிய பாதுகாப்பு பதவி நிலை பிரதானியாக ஜெனரல் ஷவேந்திர சில்வா எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி பதவியேற்கவுள்ளார். அவர் இதுவரை காலமும் பதில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியாக செயற்பட்டு வந்தார்.
இதையடுத்து, எதிர்வரும் ஜுன் மாதம் முதலாம் திகதி தொடக்கம், பாதுகாப்பு படைகளின் புதிய பிரதானியாக அவர் கடமைகளைப் பொறுப்பேற்க உள்ளார்.
அதேநேரம், மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே, எதிர்வரும் முதலாம் திகதி, புதிய இராணுவத் தளபதியாக பதவியேற்பார் என இராணுவம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
மதுபான விற்பனை நிலையங்களை திறப்பது தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தின் உத்தரவுக்காக காத்திருக்கும் மதுவரி...
60 வயதிற்கு மேற்பட்ட ஒரு லட்சத்து 38 ஆயிரம் பேர் இதுவரை கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ளவில்லை - உள்நா...
நகர அபிவிருத்தி அதிகார சபையினால் ஆரம்பிக்கப்பட்ட 11 அபிவிருத்தி திட்டங்களை துரிதமாக நிறைவேற்றுவதற்கு...
|
|