பதவி உயர்வுகள், இடமாற்றங்கள் தொடர்பில் கல்வி அமைச்சர் நிபுணர் குழுவிடம் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த முன்மொழிவு !
Sunday, June 11th, 2023
அதிபர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவிடம் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த முன்மொழிவு ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.
அதிபர் சேவை உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக கல்வி அமைச்சின் செயலாளரினால் நியமிக்கப்பட்ட குழுவின் விசேட கலந்துரையாடல் அண்மையில் கல்வி அமைச்சில் இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடலில் அதிபர் சேவையில் நீண்டகாலமாக நிலவி வரும் சில முக்கிய பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
ஊதிய முரண்பாடுகள், ஆட்சேர்ப்பு நடைமுறைகள், பதவி உயர்வுகள் மற்றும் இடமாற்றங்கள் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது.
இதுவரையில் குறித்த குழுவினால் மேற்கொள்ளப்பட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான குறுகிய காலத் தீர்வுகளை விரைவாகக் காணுமாறு குழுவிற்கு பணிப்புரை வழங்கியதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|
|


