பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பொலிஸ் பாதுகாப்பு!

Monday, March 27th, 2017

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அதிக பாதுகாப்பை பலப்படுத்தவதற்காக விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் சிவில் உடையுடன் இவர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் பிரியந்த ஜயக்கொடி குறிப்பிட்டுள்ளார்.

பண்டிகைக் கால பொருள் கொள்வனவிற்கு நகரிற்கு வருகை தரும் மக்களின் பாதுகாப்பின் நிமித்தம் நாடளாவிய ரீதியில் அனைத்து நகரங்களிலும் பொலிஸார் விசேட சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, இந்த காலப்பகுதியில் நகர் பகுதிகளுக்கு சிறுவர்களை அழைத்துச் செல்லும் போதும், பணப்பரிமாற்றங்களின் போதும் அதிக கவனத்துடன் செயற்படுமாறும் பொலிஸ் மாஅதிபர் கோரிக்கை விடுத்துள்ளார். இதனிடையே, பண்டிகை காலத்தை முன்னிட்டு கொழும்பு நகரின் பாதுகாப்பின் நிமித்தம் 1200 பொலிஸாரை மேலதிக கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பல சேவைகளின் அடிப்படையில் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இதேவேளை, நாடளாவிய ரீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடிய நகரங்களில் , போக்குவரத்தை சீர்செய்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: