பண்டிகைக் காலத்தை கருத்திற்கொண்டு கடுமையான சுகாதார நடைமுறைகள் – ஜனாதிபதி தலைமையிலான செயலணி கூட்டத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்க நடவடிக்கை!

Monday, November 8th, 2021

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு கடுமையான சுகாதார வழிகாட்டுதல்கள் அடங்கிய கோவையை சுகாதார அமைச்சு வெளியிடவுள்ளது.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு இந்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

விடுமுறை நாட்களில் ஷொப்பிங் மால்கள், ஹோட்டல்கள் மற்றும் பிற இடங்களில் பண்டிகை நிகழ்வுகள் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளன என்றும் சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

தற்போதைய சுகாதார வழிகாட்டுதல்களை பொதுமக்கள் புறக்கணித்து வருவதால், ஜனாதிபதி தலைமையிலான கொரோனா தடுப்பு செயலணி கூட்டத்தை தொடர்ந்து புதிய கட்டுப்பாடு விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் அண்மைய நாட்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையில் சிறைத்தளவிலான அதிகரிப்பு பதிவாகியுள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

சமூக இடைவெளியை மீறுபவர்களை கைது செய்ய சாதாரண உடையணிந்த பொலிஸார் கடமையில் - பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித...
புதிய கல்வி சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தும் முன்னோடி வேலைத்திட்டம் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படும்...
டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் சிரேஸ்ட்ட வை...

தலைவர்களை கொல்ல முயன்றவர்கள் எப்படி அரசியல் கைதிகளாவர்? - பிரதி நீதியமைச்சர் துஷ்மந்த மித்திரபால!
எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலில் தொடர்ந்தும் தீப்பரவல் - கடல் உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து ஆ...
ஒரு வகை பூச்சி இனங்களால் தென்னை பயிர்ச்செய்கைக்கு பாதிப்பு - முற்றாக அழியும் நிலைக்கு வந்துள்ளதாக பய...