தலைவர்களை கொல்ல முயன்றவர்கள் எப்படி அரசியல் கைதிகளாவர்? – பிரதி நீதியமைச்சர் துஷ்மந்த மித்திரபால!

Sunday, November 26th, 2017

கோத்தாபாய ராஜபக்‌ஷ, சரத் பொன்சேகா, ஜானக பெரேரா ஆகியோரைக் கொலை செய்ய முயற்சித்தமை மற்றும் அநுராதபுர தாக்குதலை மேற்கொண்டவர்களே தற்போது அரசியல் கைதிகள் என்ற பெயரில் விளக்கமறியலில் உள்ளனர் என பிரதி நீதியமைச்சர் துஷ்மந்த மித்திரபால சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் 2018 ஆம் ஆண்டு வரவு – செலவுத்திட்டத்தில் நீதி, சர்வதேச வர்த்தக மற்றும் மூலோபாய அபிவிருத்தி அமைச்சுகளுக்கான ஒதுக்கீடுகள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் உரையாற்றுகையில்;

அரசியல் கைதிகள் என்ற பெயரில் 19 பேர் விளக்கமறியலில் உள்ளதுடன் இவர்களில் 9 பேர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏனைய 10 பேரில் சிங்களவர்களும் உள்ளனர். அத்துடன் தற்போது இவர்களை அரசியல் கைதிகள் என்ற நாமத்துடன் பேசுகின்றனர்.

ஆனால் தற்போது பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் மீது முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபாய ராஜபக்‌ஷ, முன்னாள் இராணுவத் தளபதியும் அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா ஆகியோரை கொலை செய்ய முயற்சித்தமை மற்றும் அநுராதபுர தாக்குதல் போன்ற குற்றச்சாட்டுகள் உள்ளன. இவை அனைத்தும் பாரதூரமானவையாகும். ஆகையால் இவர்களை அரசியல் கைதிகள் என்று கூறமுடியாது.

Related posts: