உலக ஊடகவியலாளர்கள் மாநாடு சியோல் நகரில் ஆரம்பம் – இலங்கை உட்பட 25 நாடுகளை சேர்ந்த 35 பேச்சாளர்கள் சிறப்புரை!
Monday, April 25th, 2022
உலக ஊடகவியலாளர்கள் மாநாடு தென் கொரியா – சியோல் நகரில் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகியது.
இம்முறையும் குறித்த ஊடகவியலாளர்கள் மாநாடு மெய் நிகர் ஊடான மாநாடாகவே இடம்பெறுகின்றது.
தென் கொரிய ஊடகவியலாளர் அமைப்பு ஏற்பாடு செய்யும் இந்த மாநாட்டில் இலங்கை உட்பட 25 நாடுகளை சேர்ந்த 30 பேச்சாளர்களுக்கு கொரிய பிரதமர் கிம் பூ – கியூம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
ஆனைத்துலக ஊடகவியலில் போலி செய்திகளின் தாக்ககம் மற்றும் அவற்றை எதிர்த்துப் போராடுவதன் முக்கியத்துவம் போன்ற விடயங்களில் அனுபவ பகிர்வு மற்றும் உலக அமைதியில் ஊடகவியலாளர்களின் பங்களிப்பு போன்ற விடயங்களை வலியுறுத்தியதாகவே இம்முறை மாநாடு அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பால்மாக்களுக்கான விலைகள் அதிகரிப்பு!
இவ்வருடம் இதுவரை 250 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்!
இலங்கை - இந்திய ஒப்பந்தங்களை இரத்துச் செய்யுமாறு கோரும் மனுக்கள் தள்ளுபடி!
|
|
|


