சமூக ஊடகங்கள் தற்கொலைச் சம்பவங்களுக்கு முக்கியம் வழங்கக்கூடாது

Tuesday, June 20th, 2017

தற்கொலைச் சம்பவங்கள் தொடர்பாக சமூக ஊடகங்கள் தேவையற்ற பிரச்சாரங்களை வழங்குகின்றன  இதன் மூலம் சமூகத்திலிருந்து கட்டுப்படுத்த வேண்டிய இவ்வாறான சம்பவங்கள்  மேலும் பிரபல்யமடைவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதனால் இவ்வாறான சம்பவங்களுக்கு பிரச்சாரம் கொடுக்க வேண்டாமென அதிகாரசபை சம்பந்தப்பட்ட அனைத்து தரப்புகளையும் கேட்டுள்ளது.

இவ்வாறான சம்பவங்களை தொடர்ந்தும் ஊடகங்கள் மூலம் பிரச்சாரம் செய்வது பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள பலர் தற்கொலை செய்து கொள்வதற்கு வழி வகுக்கும்.

18 வயதுக்கு குறைந்தவர்களை மன அழுத்தத்திலிருந்து விடுவிப்பதற்கான தீர்வுக்கு ஆதரவு வழங்க தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை கடமைப்பட்டுள்ளது. இதற்காக உளவள சமூகப் பிரிவொன்றும் இயங்கி வருகின்றது.

அதிகார சபையின் மாவட்ட மற்றும் பிரதேச உத்தியோகத்தர்கள் மூலமாகவும் இந்த ஆதரவை பெற்றுக் கொள்ள முடியும் என அதிகார சபை தெரிவித்துள்ளது.

Related posts: