பண்டிகைக் காலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட பாதுகாப்பு நடவடிக்கை – பொலிஸ் திணைக்களம் தகவல்!
Thursday, December 16th, 2021
பண்டிகைக் காலத்தில் கொழும்பு நகரிற்கு வருகை தருபவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் விசேட பாதுகாப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
திருடர்கள் மற்றும் கொள்ளையர்களை தேடுவதற்கும் கைது செய்வதற்கும் மேலதிக பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய , சாதாரண உடையில் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடி படையினரும் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பொலிஸாரினால் நடமாடும் ரோந்து பணிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இலங்கை வருகின்றார் றீட்டா ஐசக்!
ரயில் சேவைகள் வழமைக்கு...!
இடைநிலை தரங்களுக்கு மாணவர்களை இணைத்தல் குறித்து கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு!
|
|
|


