நேர்முகப் பரீட்சை எதுவுமின்றி அதிபர் சேவைவக்கு உள்ளீர்ப்பு!

Tuesday, July 4th, 2017

இலங்கை அதிபர் சேவையின் வகுப்பு 2 தரம் ணன்றில் கடமையாற்றியதன் காரணமாக புதிய அதிபர் சேவை பிலமாணக் குறிப்பிற்கமைய இலங்கை அதிபர் சேவையின் 2ஆம் வகுப்பிற்கு உள்ளீர்க்கப்பட்டதனால் பாதிக்கப்பட்டோருக்கு நேர்முகப் பரீட்சை எதுவுமின்றி இலங்கை அதிபர் சேவையின் 1அம் வகுப்பிற்கு 01.07.2008 முதல் உள்ளீர்ப்புச் செய்யப்படுவர் எனக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இவ்வாறானவர்களை இலங்கை அதிபர் சேவையின் 1ஆம் வகுப்பிற்க உள்ளீர்க்கவும் அவர்களுக்கான சம்பளத்தினை வழங்கவும் தேசிய சம்பள ஆணைக்குழு தாபன பணிப்பாளர் நாயகம், அரசை சேவை ஆணைக்குழு டிஎன்பன கல்வி அமைச்சுக்கு அனுமதி வழங்கியுள்ளன.

இவ்வாறு 01.07.2008 முதல் உள்ளீர்ப்பதற்கான அரச வர்த்தமானி அறிவித்தல் 2004/15 ஆம் இலக்க 02.02.2017 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ளது இவ்வாறு உள்ளீர்க்கப்படுவோருக்கு 01.01.2011 ஆம் திகதியிலிருந்து நிலுவையின்றி சம்பளம் வழங்கப்படும். இவ்வாறான இலங்கை அதிபர் சேவை ஐ சேர்ந்தோர் தற்போது கல்வி அமைச்சில் நடைபெறும் அதிபர் சேவைக்கான பதவி உயர்வ நேர்முகப் பரீட்சைக்கு சமூகமளிக்க வேண்டிய அவசியம் இல்லையென கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் எச்.யூ.பிரேமதிலக்க தெரிவித்தார்.

இவர்களுக்கான இலங்கை அதிபர் சேவை தரம் ஐ க்கு உள்ளீர்க்கப்பட்ட கடிதங்கள் விரைவில் கல்வி அமைச’;சினால் அனுப்பி வைக்கப்படுமெனவும் சுமார் 2532 பேர் இவ்வாறு உள்ளீர்க்கப்படுவர் எனவும் அவர்களுக்கான சம்பள மாற்றங்களை செய்து முதலாம் தர அதிபர் சம்பளத்தை வழங்குமாறும் வலய கல்விப் பணிப்பாளர்கள் கோரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Related posts: