ரயில் சேவைகள் வழமைக்கு…!  

Friday, October 13th, 2017

 

ரயில் சாரதிகள் ஆரம்பித்த வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது.இதனால் இன்று ரயில் சேவைகள் வழமை போன்று இடம்பெறும் என்று ரயில்வே கட்டுப்பாட்டு பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ரயில் சாரதிகள் உரிய இடங்களுக்கு இன்னமும் செல்லாத காரணத்தால் சில ரயில் சேவைகள் மாத்திரம் தாமதமாகலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கு அமைய அவரது செயலாளர் ஒஸ்ரின் பெர்னாண்டோவுக்கும் ரயில்வே தொழிற்சங்க பிரதிநிதிகள் சிலருக்கிடையில்  நேற்று ஜனாதிபதி செயலகத்தில் பேச்சுவார்த்தை  இடமபெற்றது.

இந்தப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து தொழிற்சங்க நடவடிக்கையைக் கைவிடுவதென தீர்மானிக்கப்பட்டதாக ரெயில்வே பொதுமுகாமையாளர் மஹாநாம அபேசிங்ஹ தெரிவித்தார்.

இந்த  பேச்சுவார்தையின் போது ரயில்வே தொழிற்சங்க  அமைப்புக்களின் பிரச்சினைகளை ஆராய்வதற்காக குழுவை நியமிப்பதாகவும் பிரச்சினைகளுக்கு ஒரு மாதகாலத்திற்குள் தீர்வு காணப்படும் என்றும் முடிவானதாக ரயில்வே தொழிற்சங்க பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

பிரச்சினைகளை ஆராய்வதற்காக போக்குவரத்து அமைச்சின் செயலாளர் தலைமையில் 8 பேரைக்கொண்ட குழு அதற்hகாக அமைக்கப்பட்டுள்ளது.

Related posts: