சம்பூர் அனல் மின்நிலையம் கைவிடப்பட்டது?

Wednesday, May 18th, 2016

சம்பூரில் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நிர்மாணிக்கப்படவுள்ள அனல் மின்நிலையம் கைவிடப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும். இது தொடர்பில் ஜனாதிபதி முன்வைத்த கோரிக்கையை பரிசீலிப்பதாக இந்திய பிரதமர் தெரிவித்தள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனவே சம்பூர் அனல் மின்நிலையம் அமைக்கப்படாது என்றே கூறலாம் என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித்த சேனாரட்ன  தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: