அனுமதிப் பத்திரமின்றி பஸ்களை போக்குவரத்தில் ஈடுபடுத்தினால் 10 ஆண்டு சிறை!

Tuesday, February 7th, 2017

நாட்டில் உரிய அனுமதிப் பத்திரமின்றி பஸ்களை போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்தியுள்ளவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிப்பதற்கான அதிகாரம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் தற்போது சுமார் 350 பஸ்கள் வீதி போக்குவரத்து அனுமதிப் பத்திரமின்றி சேவையில் ஈடுபட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இவ்வாறு சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பஸ்களை கண்டுபிடிப்பதற்காக பொலிஸாருக்கு தகவல் வழங்கவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.பி.ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

அனுமதிப் பத்திரமின்றி சேவையில் ஈடுபடும் 350 பஸ்களில் 100 பஸ்கள் வரை மாகாணங்களுக்கு இடையிலான சேவையில் ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான பஸ் உரிமையாளர்களுக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனையை விட நீதிமன்றத்தின் ஊடாக இரண்டு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்க முடியும் என ஆணைக்குழுவின் தலைவர் மேலும் அறிவித்துள்ளார்.

7626_1486417317_gg

Related posts: