பண்டிகைக் காலத்தில் புதிய கட்டுப்பாடுகள் எதுவும் கிடையாது – இராணுவத் தளபதி அறிவிப்பு!
Thursday, December 24th, 2020
நத்தார் பண்டிகைக் காலத்தில் புதிதாக கட்டுப்பாடுகளை விதிப்பதற்கான எந்தத் திட்டமும் இல்லை என தெரிவீத்துள்ள இராணுவத் தளபதி சவேந்திர சில்வா எனினும் நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு செயற்படுமாறு மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன் தொற்று வேகமாக பரவி வருகின்ற நிலையில் பயணங்களை கட்டுப்படுத்துமாறும் அவர் கூறியுள்ளார்.
இதேநேரம், நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் உறுதி செய்யப்பட்ட தொற்றாளர்களில் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்தவர்களும் அடங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், வெளிநாடுகளில் இருந்து 600இற்கும் மேற்பட்டோர் நேற்று அழைத்து வரப்பட்ட நிலையில் இன்றும் வௌிநாடுகளில் தங்கியுள்ள மேலும் பலர் நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ளதாகவும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வடக்கின் பட்டதாரிகள் கவனயீர்ப்புப் போராட்டம்!
ஓய்வூதியத்தில் மாற்றம் செய்வதை அரசாங்கம் கைவிட வேண்டும் - இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை!
முச்சக்கர வண்டிகளின் எண்ணிக்கையைக் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை!
|
|
|


