பண்டிகைக் காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலையை குறைப்பதற்கு எதிர்பார்ப்பு – வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தகவல்!

Monday, November 6th, 2023

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலையை குறைப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின்போது, அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் பண்டிகை காலத்தில் அதிகளவிலான பொருட்களை இறக்குமதி செய்வது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலையை அதிகரிக்காமல், தற்போதைய விலை மட்டத்தில் அல்லது அதனை விட குறைந்த விலையில் வைத்து கொள்வதற்கான வேலைத் திட்டமொன்றை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தற்போது கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


மறைத்து வைக்கப்பட்டுள்ள நெல் இருப்புக்களை சந்தைக்கு விடுவதற்கு அவசரகாலச் சட்டத்தைக் கூட பயன்படுத்த த...
சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர் மட்ட உடன்பாடு ஆகஸ்ட் மாத இறுதிக்குள் எட்டப்படும் – கோட்டாபய ராஜபக்ச ...
பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை - தெல்லிப்பளையில் உணவு சட்டங்களை மீறிய பலருக்கு மல்லாகம் ...