பணிப்பெண்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதை நிறுத்த அரசாங்கம் தீர்மானம்?

Tuesday, October 18th, 2016

வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களை அனுப்புவதை குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்புவதை படிப்படியாக குறைப்பதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுகாதார அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான ராஜித சேனாரத்ன செய்தி நிறுவனம் ஒன்றிற்கு  வழங்கிய செவ்வியில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். பணிப்பெண்கள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுகின்றமை, கட்டண அதிகரிப்பு மற்றும் உள்நாட்டில் ஏற்படும் ஊழியர் பற்றாக்குறையை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்கள் குறிப்பாக வீட்டுப்பணிப்பெண்கள் மற்றும் பயிற்சிப்பெறாத பணியாளர்கள் அந்நிய செலாவனியாக சுமார் ஏழு பில்லியன் டொலர்களை வருடாந்தம் தாய்நாட்டிற்கு அனுப்பி வைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இது தொடர்பில் ஆராய்வதற்கு விசேட குழுவொன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளதோடு, படிப்படியாக பணிப்பெண்களாக வெளிநாடுகளுக்கு இலங்கைப் பெண்களை அனுப்புவதை குறைப்பதற்கு எதிர்ப்பார்ப்பதோடு இறுதியில் முழுமையாக அதனை நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் வெளிநாடுகளுக்கு பணிப்பெண்கள் அனுப்பப்படுவதை ஊக்கவிக்க கூடாது எனவும், சமூக செலவுகள் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பணிப்பெண்களாக செல்வோர் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாவதோடு கஷ்டங்களை அனுபவிப்பதாகவும் குறிப்பாக பணிப்பெண்களின் பிள்ளைகள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாவதோடு, அவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2013ஆம் ஆண்டு மாத்திரம் ஆயிரத்து 650 வீட்டுப்பணிப்பெண்கள் அவர்களது எஜமானார்களால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதோடு, உடல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக முறைப்படு செயதுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் சமீபத்திய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

4213_1464941337_PhototasticCollage-2016-06-03-10-08-32

Related posts: