பணிப்புறக்கணிப்பின் எதிரொலி தபால் சேவையை இடைநிறுத்தியது ஓமான்!
Wednesday, June 20th, 2018
நாட்டில் தொடரும் தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் காரணமாக, இலங்கைக்கான தபால் சேவையை தற்காலிகமாக நிறுத்துவதாக ஓமான் அஞ்சல் சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.
அஞ்சல் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள இணைய அறிக்கையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
குறித்த போராட்டத்தினால் நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக, இலங்கைக்கான அஞ்சல்களை ஏற்பதை நிறுத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மறு அறிவித்தல்வரை இலங்கைக்கான அஞ்சல்களை பொறுப்பேற்க வேண்டாம் என இலங்கை அஞ்சல் திணைக்களத்தினால் விடுக்கப்பட்ட மின்னஞ்சல் அறிவிப்பை தொடர்ந்தே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஓமான் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
ஜூலை 6 முதல் சிறுவர் பகல்நேர பராமரிப்பு நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு அனுமதி - சுகாதார சேவைகள் ப...
கொரோனா அச்சம் - சிறைச்சாலைகளில் கைதிகளை பார்வையிட தடை - இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வ...
புதிய கல்விக் கொள்கை - ஜனாதிபதி தலைமையில் 10 பேரடங்கிய உப குழுவை நியமிக்க அரசாங்கம் அங்கீகாரம்!
|
|
|


