இன்று இலங்கை வருகிறார் பான் கீ மூன்!

Wednesday, August 31st, 2016

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான் கீ மூன் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு உள்ளூர் நேரப்படி இன்று மாலை இலங்கை வந்தடையவுள்ளார்.

மியன்மாருக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இன்று மாலை இலங்கை வந்தடையவுள்ளதானக வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று தொடக்கம் மூன்று நாட்களுக்கு நாட்டில் தங்கியிருக்கும் பேன் கீ மூன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

நாளைய தினம் காலிக்கு விஜயம் செய்யவுள்ள மூன், “நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வில் இளைஞர்களின் பங்களிப்பு“ என்ற தொனிப்பொருளில் நடைபெறவுள்ள செயலமர்வில் பங்கேற்கவுள்ளார்.

நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யும் ஐ.நா பொதுச் செயலாளர் யுத்தத்தினால் இடம்பெயர்ந்து முகாம்களில் வாழும் மக்களை சந்திக்கவுள்ளார்,

விஜயத்தின் இறுதி நிகழ்வாக வெள்ளிக்கிழமை மாலை ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை அலுவலகத்தில் நடைபெறவுள்ள ஊடகசந்திப்புடன் பான் கீ மூனின் இலங்கைக்கான விஜயம் நிறைவடையவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts: