பட்டினி ஒழிப்பு பட்டியலில் இலங்கை முன்னேற்றம்!
Wednesday, October 19th, 2016
உலகில் பட்டினியை ஒழித்து அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் பட்டியலில் இலங்கை 87ஆவது இடத்தைப் பிடித்துள்ளதாக “உலக பட்டினி குறியீட்டெண் பட்டியல்” ஆய்வறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. 118 அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையை அண்மித்துள்ள தெற்காசிய நாடுகளான இந்தியா 97ஆவது இடத்தையும், அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் இடம்பிடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2000ஆண்டுடன் ஒப்பிடுகையில் உலகளாவிய ரீதியில் 29 சதவீதத்தால் பட்டினியர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 2000ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுரறயனெய கம்கோடியா மற்றும் மியன்மார் உள்ளிட்ட 20 நாடுகளின் பட்டினி ஒழிப்பு 50 சதவீதமாக குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை பட்டினி ஒழிப்பில் மத்திய ஆபிரிக்க குடியரசு, சாம்பியா, மடகாஸ்கர், ஏமன் குடியரசு உள்ளிட்ட நாடுகள் இறுதி இடத்தைப் பிடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே நேரம் பட்டினி ஒழிப்பில் உலக அளவில் தென் அமெரிக்க நாடுகள் முதலிடத்தை வகிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts:
|
|
|


