பட்டதாரிகளை ஆசிரியர் சேவைகளுக்கு இணைத்துக்கொள்வதற்கான பரீட்சை மார்ச் 25ஆம் திகதி நடைபெறும் – கல்வி அமைச்சு அறிவிப்பு!

அரச பணியில் உள்ள பட்டதாரிகளை ஆசிரியர் சேவைகளுக்கு இணைத்துக்கொள்வதற்கான பரீட்சை மார்ச் 25ஆம் திகதி நடைபெற உள்ளது.
நாடு முழுவதும் 341 நிலையங்களில் இதற்கான பரீட்சை நடத்தப்படும் என கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகளை அனுப்புவதற்குத் தேவையான நடவடிக்கைகளை பரீட்சை திணைக்களம் ஏற்கனவே எடுத்துள்ளது.
பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களுக்கு இவர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
மாகாண அடிப்படையில் உருவாகும் வெற்றிடங்களுக்கு மாகாண சபைகள் வருடாந்தம் பட்டதாரிகளை இணைத்துக் கொள்ளும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
மந்திகை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக வைத்திய கலாநிதி குகதாசன் நியமனம்
வெளிநாடு செல்லும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தகவல்!
தனிநபர் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் வரையறை செய்வது தொடர்பிலான விதிமுறைகள் விரைவில் உருவாக்கப்படும்...
|
|