பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனத்துடன் 41 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு – இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவிப்பு!

அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிகள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் நிரந்தர நியமனம் வழங்கப்படுவோருக்கு மாதாந்தம் 41 ஆயிரம் ரூபா சம்பளம் பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் உரையாற்றிய போது இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை 2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட சுமார் 58,000 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
கொரோனா தொற்று காரணமாக பட்டதாரிகளுக்கு வழங்கப்படவிருந்த தொழில் பயிற்சிக்கு இடையூறு ஏற்பட்டதாகவும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிகள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
காணாமற்போனவர்கள் தொடர்பில் இறப்பு பதிவுசெய்யும் கால எல்லை நீடிப்பு – முல்லைத்தீவு மாவட்ட காணிப்பதிவா...
மீண்டும் இருளில் மூழ்கப்போகும் இலங்கை - மின்சார சபை பொறியிலாளர்கள் சங்கம் !
எமக்கு உதவ யாருமில்லை ; 18 - 6- வயது ஆண்கள் நாட்டை விட்டு வெளியேறதடை - வேதனை வெளியிட்ட உக்ரைன் அதிபர...
|
|