இலங்கையின் மறுசீரமைப்புக்காக யு.எஸ்.எயிட் அமைப்பு நிதி உதவி!
Saturday, July 21st, 2018
நாட்டின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்காக ஐக்கிய அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான முகவரான யு.எஸ்.எயிட் அமைப்பு 1.6 பில்லியன் இலங்கை ரூபாவினை மேலதிக மானியமாக வழங்கியுள்ளது.
கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் ஊடக அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூகோள சமுக அமைப்புகள் இலங்கையின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக இந்த நிதி உதவி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம் மற்றும் உள்ளூர் சிவில் அமைப்புகளின் பங்களிப்புடன், 3 வருடங்களுக்கான வேலைத்திட்டத்துக்கு அமெரிக்க யு.எஸ்.எயிட் பங்களிப்பு செய்யவுள்ளது.
மறுசீரமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் நிலவுகின்ற சவால்களை அடையாளம் கண்டு தீர்ப்பதற்காக இந்த வேலைத்திட்டம் அமுலாக்கப்படுகிறது.
Related posts:
பாடசாலை இரண்டாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 25 ஆம் திகதி ஆரம்பம்!
சாவால்களைக் கண்டு அஞ்சாது கொள்கைகளில் உறுதியாகவிருந்து முன்னேற்றிச் செல்லும் சந்ததியை கல்வியின் மூலம...
முல்லைத்தீவு இளைஞன் மரணம் - நீர் மாதிரிகள் பகுப்பாய்வுக்கு.!
|
|
|
தமிழ் பேசும் இளைஞர் யுவதிகளை பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை: வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கு...
மோட்டார் சைக்கிள் விபத்து - படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் மூன்று மாதங்களின் பின்னர் சிகிச்சை பலன...
நான்காம் திகதிமுதல் பாடசாலை மாணவர்களுக்கு காலணிக்கான வவுச்சர் வழங்கும் நடவடிக்கை ஆரம்பம் - கல்வியமைச...


