பட்டதாரிகளிள் ஆர்ப்பாட்டம் : கொழும்பில் பதற்றம்!
Tuesday, May 8th, 2018
வேலையற்ற பட்டதாரிகளால் கொழும்பில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தைக் கலைக்கும் வகையில் பொலிஸார் தண்ணீர் பீய்ச்சி அடித்து வருகின்றனர்.
போராட்டக்காரர்கள் அரச தலைவரின் செயலகத்தை முற்றுகையிடப் போவதை அறிந்த பொலிஸார் அவர்கள் செல்லும் பாதையைக் குறிக்கி்ட்டு தண்ணீர் பீய்ச்சி அடித்து வருகின்றனர்.
வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் “தொழில் உரிமையாகும்” என்ற தொனிப்பொருளில் கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்துக்கு முன்னால் தமது ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்தனர்.
பொலிஸாரின் தாக்குதலால் அதிருப்தியடைந்த பட்டதாரிகள் நாடாளுமன்றில் கதிரையை சூடேற்றிக்கொண்டிருக்கும் மாடுகளின் பின் பக்கத்துக்குப் போய் தண்ணீர் அடியுங்கள் என்று தமது எதிர்ப்புக் கோசங்களை வெளிப்படுத்தினர்.
Related posts:
க.பொ.த சாதாரண பரீட்சையில் வடக்கு, கிழக்கு பின்னடைவு!
பொருளாதாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய வங்கி அதிகாரிகளிடம் கேள்வியெழுப்ப வேண்டு...
900 க்கும் அதிகமான சிறுவர்கள் புற்றுநோயால் பாதிப்பு – மருத்துவர்கள் அதிர்ச்சித் தகவல்!
|
|
|


