அரச செலவினங்களைக் கட்டுப்படுத்த வருகின்றது புதிய நடைமுறை – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு!

Friday, July 14th, 2023

அரச செலவினங்களைக் கட்டுப்படுத்துவதற்கும் புதிய அரசாங்க வருமானத்தை ஈட்டுவதற்கும் முறையான வழிமுறைகள் உடனடியாக அறிமுகப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாட்டை கட்டியெழுப்புவதற்கு நிதி ஒழுக்கம் இன்றியமையாதது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாவிற்கும் அதிகபட்ச பெறுமதி பெறப்பட வேண்டும் எனவும், ஆனால் அது பெரும்பாலும் அரசாங்க செலவீனத்தில் இடம்பெறுவதில்லை எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுமக்களின் வருமானத்தை மறந்துவிடுவது மாத்திரமன்றி, எந்தவொரு பயனும் இல்லாத செயற்பாடுகளுக்காக பொதுமக்களின் பணத்தை வரம்பற்ற முறையில் செலவிடுவதே இந்த நாட்டில் பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுத்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

புதிய அரச வருமானத்தை உருவாக்குவதற்கான உத்திகளை கண்டறிய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை ஜனாதிபதி அலுவலகத்தில் கையளிக்கும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: