பசில் ராஜபக்ஷ – பிரதமர் தினேஷ் குணவர்தன சந்திப்பு – பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு கோரிக்கையொன்றை முன்வைக்க நடவடிக்கை!

பொருளாதார பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதியிடம் விசேட கோரிக்கையொன்றை முன்வைக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் மக்கள் ஐக்கிய முன்னணி ஆகியன தீர்மானித்துள்ளன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர்கள் இணைந்து இந்தக் கோரிக்கையை முன்வைக்கவுள்ளனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அதன் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ மற்றும் மக்கள் ஐக்கிய முன்னணியின் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோர் தலைமையில் கூடியது.
நாட்டு மக்கள் கடுமையான பொருளாதார அழுத்தத்தில் உள்ளதால், அவர்களுக்கு நிவாரண வேலைத்திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துவது அவசியம் என ஜனாதிபதியிடம் விசேட கோரிக்கை விடுக்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஸ்ரீPலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பெசில் ராஜபக்ஷ அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து உள்ளூராட்சித் தேர்தலை நடத்துமாறும், இல்லாவிடின் அந்தத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு நீதி வழங்குமாறும் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதேவேளை அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு தொடர்ந்து கிடைக்கப்பெறாமை மற்றும் சமுர்த்தி பயனாளர்களின் பிரச்சினை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அவர் கலந்துரையாடியுள்ளனர்.
இதேநேரம் இந்தமுறை பாதீட்டில் உள்வாங்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு 3 பரிந்துரைகளை முன்வைப்பதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|