5 இலட்சம் ரூபாவை ஜனாதிபதிக்கு கொடுத்த ஓய்வுபெற்ற ஆசிரியை!

Saturday, November 18th, 2017

மாவனெல்ல, ஸ்ரீ அபய ராஜமகா விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள மூன்று மாடி கட்டடத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடிக்கல் நாட்டியுள்ளார்.

குறித்த மூன்று மாடிக் கட்டடத்தின் நிர்மாணப் பணிக்கு, பொல்கஹவலை பிரதேசத்தில் வசிக்கும் ஓய்வுபெற்ற ஆசிரியையான திருமதி. ஆர்.பி.என். ரத்னாயக்க 5 இலட்சம் ரூபாயை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி ‘உலகின் அபிவிருத்தியடைந்த பல நாடுகளிலும் காணக்கிடைக்காத ஒழுக்க விழுமியங்களுடன் கூடிய சமூகம் இலங்கையில் காணப்படுவதற்கு பௌத்த மத கோட்பாடுகளினால் எமது சமூகம் போஷிக்கப்பட்டிருப்பதே காரணமாகும்.

புத்தசாசனத்தின் மேம்பாட்டிற்காக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது” என தெரிவித்துள்ளார்.மூன்று மாடி கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டல் நிகழ்வின் பின், இப்புண்ணிய நிகழ்வினை நினைவுகூரும் முகமாக மரக்கன்று ஒன்றையும் ஜனாதிபதி நாட்டினார்.இந்த நிகழ்வில், அமைச்சர்களான கபீர் ஹாசிம், காமினி ஜயவிக்ரம பெரேரா, ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, தயா கமகே மற்றும் முன்னாள் அமைச்சர் அதாவுத செனவிரத்ன உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் பெருந்தொகையான பிரதேச மக்களும் கலந்துகொண்டனர்.

Related posts: