பங்காளதேஷ் உயர் ஸ்தானிகர்- பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சந்திப்பு!
Thursday, August 10th, 2017
இலங்கைக்கான பங்காளதேஷ் உயர் ஸ்தானிகர் ரியாஸ் ஹமிதுல்லாஹ் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.இந்த சந்திப்பின் போது பங்காளதேஷ் உயர் ஸ்தானிகர் மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஆகியோருக்கிடையே இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக சிநேகபூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இதனை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.இந்த நிகழ்வில் பங்காளதேஷ் உயர் ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் கொமொடோ அஸ்லம் பர்வேஷ் கலந்துகொண்டார்.
Related posts:
வெளிப்படைத் தன்மையுடன் விசாரணைகள் இடம்பெறுகிறது - பிரதமர் தெரிவிப்பு!
தொழிலை இழந்து நாடு திரும்புவோருக்கு வட்டியில்ல கடன் - தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவி...
நாடு முழுவதிலும் மழையுடனான வானிலை மேலும் அதிகரித்துக் காணப்படும் - 3 ஆம் திகதி புயல் உருவாகும் - வள...
|
|
|


