பங்களாதேஷ் – இலங்கை ஒருங்கிணைந்த ஆலோசனை ஆணைக்குழுவை நிறுவ புரிந்துணர்வு ஒப்பந்தம்!
Wednesday, February 15th, 2023
இரு நாடுகளுக்கிடையில் அரசியல், பொருளாதார, தொழிநுட்ப, மற்றும் விஞ்ஞான ரீதியான கொன்சியூலர் மற்றும் கலாச்சார ஒத்துழைப்புக்கள் உள்ளடக்கிய இருதரப்பு உறவுகளை ஊக்குவித்தல், பலப்படுத்தல் மற்றும் விரிவாக்கம் செய்யும் நோக்கில் பங்களாதேஷ் – இலங்கை ஒருங்கிணைந்த ஆலோசனை ஆணைக்குழுவை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
தற்போதுள்ள தரப்பினர்களுக்கிடையேயான ஒத்துழைப்புக்களை அனைத்து துறைகளிலும் இருநாட்டு வெளிவிவகார அமைச்சர்களின் மட்டத்தில் மீளாய்வு செய்தல், மதிப்பீடு செய்தல் மற்றும் ஒத்துழைப்புக்களின் புதிய துறைகள் பற்றி ஆராய்வதற்கான பொறிமுறையாக, முன்மொழியப்பட்டுள்ள ஆலோசனை ஆணைக்குழு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
முன்மொழியப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்த வரைபுக்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது.
அதற்கமைய, குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக வெளிவிவகார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


