பகைமையை தூண்டும் கருத்துக்களால் வன்முறைகள் இடம்பெறலாம் – தேர்தல் கண்காணிப்பு அமைப்பு எச்சரிக்கை!

Monday, July 27th, 2020

கடந்த சில நாட்களாக தேர்தல் பிரச்சாரத்தில் காணப்படும் பகைமையை தூண்டும் கருத்துக்கள் காரணமாக தேர்தல் வன்முறைகள் இடம்பெறக்கூடிய ஆபத்துள்ளதாக தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் அரசியல் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரங்களில் வெளியிடும் கடுமையான கருத்துக்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியாகும் கருத்துக்கள் காரணமாக தேர்தலுக்கு முன்னரும் பின்னரும் வன்முறைகள் நிகழக்கூடும் என அவர் எச்சரித்துள்ளார்.

மேலும் விருப்புவாக்குகளுக்காக கட்சிகளுக்குள் இடம்பெறும் மோதல்கள் குறித்து கவலையடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் வன்முறைகளை தவிர்ப்பதற்காக அரசியல் கட்சிகளின் தலைவர்களும் வேட்பாளர்களும் தாங்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் குறித்து அவதானமாகயிருக்க வேண்டும் என தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் வேண்டுகோள் விடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: