நெல் பயிர்களில் களை தாக்கம் – மன்னார் மாவட்ட விவசாயிகளுக்கு விவசாயப் பணிப்பாளர் எச்சரிக்கை!

Tuesday, January 16th, 2024

மன்னார் மாவட்டத்தில் நெல்லில் களை தாக்கம் அவதானிக்கப்பட்டுள்ளதாக விவசாயப்பணிப்பாளர் சகிலா பானு எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் அது தொடர்பில் அவதானமாக செயல்படுமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் மன்னார் மாவட்டத்தில் நெல்லில்  களை தாக்கம் அவதானிக்கப்பட்டுள்ளது.

நெல்லில்  களையானது  தண்டுப்பகுதியில் ஊதா நிறத்தில் கரும்புள்ளிகளுடன் காணப்படும். விவசாயிகள் நெல்லில்  களையை  வெட்டி அகற்ற வேண் டும். விவசாயிகளால் நெல்லில்  களை அடையாளம்காண்பது கடினமாக இருந்தால் அருகில் உள்ள கம நல சேவைகள் நிலையத்தை நாட முடியும். உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படாவிட்டால் நெல்லில்  களை விதை உதிர்ந்து பரவலடையக்கூடும்.

இது விளைச்சலில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் விவசாயப்பணிப்பாளர் சகிலா பானு எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: