நெல் கொள்வனவுக்கான நிதி ஒதுக்கீடு இரட்டிப்பு – 20 பில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Friday, February 24th, 2023

விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு செய்வதற்கு ஒதுக்கப்பட்ட தொகையை இரட்டிப்பாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய விவசாயிகள் மற்றும் பொது மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஒதுக்கப்பட்ட தொகையை 10 பில்லியன் ரூபாவிலிருந்து 20 பில்லியன் ரூபாவாக அதிகரிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்து, இருப்புகளைப் பயன்படுத்தி குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இரண்டு மாதங்களுக்கு தலா 10 கிலோ அரிசி வழங்க அரசு ஏற்கனவே தீர்மானித்திருந்தது.

02 மில்லியன் குடும்பங்களுக்கு அரிசி மற்றும் இதர சலுகைகளை வழங்குவதற்கு முன்னர் தீர்மானம் எடுக்கப்பட்ட போதிலும், இப்போது அரசாங்கம் 2.9 மில்லியன் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு அரிசியை இலவசமாக வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

மக்களது தேவை எதுவோ அதை பெற்றுக் கொடுப்பவர்களாகவே ஈழமக்கள் ஜனநாயக கட்சி இருந்து வருகின்றது - ஈ.பி.டி....
நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை - போதுமானகளவு எரிபொருள் உள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்ம...
அணிசேரா நாடுகளின் மாநாடு உள்ளிட்ட பல்வேறு மாநாடுகளில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் உகண்டா வியஜம் – ...