நெல் கையிருப்பை பிணையாக வைத்து நெல்லைக் கொள்வனவு செய்வதற்காக நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு கடன் வசதிகளை வழங்குங்கள் – இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கிக்கு ஜனாதிபதியின் உத்தரவு!
Saturday, March 5th, 2022
இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முக்கிய உத்தரவொன்றை வழங்கியுள்ளார்.
அதன்படி நெல் கையிருப்பை பிணையாக வைத்து நெல்லைக் கொள்வனவு செய்வதற்காக நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு கடன் வசதிகளை வழங்குமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு – 2, சேர் சித்தம்பலம் ஏ. கார்டினர் மாவத்தையில் அமைந்துள்ள நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைமை அலுவலகத்தை நேற்றைய தினம் பார்வையிட்ட போதே அவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –
போட்டித் தன்மையுடன் நெல்லைக் கொள்வனவு செய்து, அரசாங்கத்திடம் போதியளவு நெல் கையிருப்பைப் பேணுவதை இலக்காக கொண்டு, இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
யாழ்.மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவின் 24 மணித்தியால தொடர்பிலக்கங்கள் அறிவிப்பு
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்னெடுக்கும் பிரச்சாரம் உண்மைக்குப் புறம்பானது - மருத்துவ விநியோகப்...
கடத்தல்காரர்களே அரசாங்கத்தை மாற்ற முயற்சிக்கின்றார்கள் - அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டு!
|
|
|


