நெருக்கடிக்கு முறையான தீர்வுகளை வகுக்க பொதுமக்களின் கருத்துக்களை நாடும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

Tuesday, April 26th, 2022

தற்போதைய நெருக்கடிக்கு முறையான தீர்வுகளை வகுக்க, 12 விடயதானங்களுக்கு கீழான மக்களை அழைக்க அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தயாராகி வருகிறது.

இதன்படி, குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால திட்டங்களை அடையாளம் காணவும், அதற்கான தேசிய வேலைத்திட்டங்களை உருவாக்கவும் முன்மொழிவுகள் கோரப்பட்டுள்ளன.

நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் இந்த நேரத்தில் நேர்மையான நோக்கத்துடன் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே

நாட்டுக்குத் தேவையான அத்தியாவசிய மருந்துப் பொருட்களை ஏற்றிவரும் கப்பல் இன்று நாட்டை வந்தடையவுள்ளது.

இந்திய கடனுதவியின் கீழ், 101 வகையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை இலங்கை பெற்றுக்கொள்ள உள்ளதாக சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன முன்னராக தெரிவித்திருந்தார்.

மேலும் மருந்துப் பொருட்களை பெற்றுக்கொள்வதற்கு கடன் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ள போதிலும், அவற்றை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு சுமார் 100 நாட்கள் வரை செல்லும்.

அதுவரை இந்தியாவிலிருந்து கடன் வழங்குதலின் கீழ் மருந்து விநியோகம் தொடரும் எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: