அனைத்து பொது சந்தைகளும் எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் மீளத் திறக்கப்படும் – யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவிப்பு!

Thursday, May 28th, 2020

யாழ் மாவட்டத்திலுள்ள அனைத்து பொது சந்தைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை மக்கள் பயன்பாட்டுக்காக மீளத் திறக்கப்படவுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்டத்தில் தற்பொழுது இயல்பு நிலை படிப்படியாக திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில் பொதுச்சந்தைகளையும் திறப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என பலராலும் கோரப்பட்டுள்ளது.

அதன்பிரகாரம் யாழ்ப்பாணத்தில் முக்கியமான சந்தைகள் அமைந்திருக்கின்ற பிரதேச சபையினர், உள்ளுராட்சி அதிகார சபையின் அதிகாரிகளுடனும் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டிருந்தோம்

 அதனடிப்படையில் தங்களுடைய சந்தை தொகுதிகளை உரிய சுகாதார நடைமுறைகளுக்கு அமைய நடைமுறைகளை பின்பற்றி அவற்றை மீளத் திறப்பது குறித்து நடவடிக்கை தற்போது மேற்கொண்டு வருகின்றார்கள்.

இது அநேகமாக எதிர்வரும் திங்கட்கிழமை அளவில் அதாவது ஜூன் மாதம் முதலாம் திகதிக்கு பிற்பாடு இவற்றை அந்த இடங்களிலே திறந்து செயல்படுத்தக்கூடியவாறாக இருக்கும். அதே நேரத்தில் சுகாதாதார ஒழுங்கு விதிகளை வியாபாரிகளும் அங்கு செல்லும் பொது மக்களும் பின்பற்ற வேண்டியது கட்டாயமாகும்.

சில விடயங்களை பொறுத்த வரையில் ஒவ்வொரு உள்ளூர் அதிகார சபையினருக்கும் கூறியிருக்கின்றோம் அந்தந்த பிரதேச செயலர்களுடன் அந்த பகுதி பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதார பரிசோதகர்களின் அறிவுறுத்தல் அல்லது அவர்களுடைய கண்காணிப்பின் கீழும் இந்த சந்தையினை இயக்குவதற்கு உரிய நடவடிக்கை முன்னெடுக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் சந்தைகள் யாவும் வழமை போன்று மக்களுக்கு சேவையாற்ற திறக்கப்படவுள்ளது. அத்தோடு பொதுமக்கள் சுகாதார நடைமுறையிணையும் சமூக இடைவெளியினையும் பின்பற்றி சந்தையினைபயன்படுத்திக் கொள்ளுமாறும் நான் கோரிக்கை விடுகின்றேன் என  அவர் மேடலும் தெரிவித்துள்ளார்.

Related posts:


புதிய திட்டங்களை போக்குவரத்து அமைச்சு தயாரித்து அதனை துரிதமாக செயற்படுத்த வேண்டும் – ஜனாதிபதி கோட்டா...
203 ஆவது 'அமாதம் சிசிலச' நிகழ்வில் பிரதமர் பங்கேற்பு - நாட்டு மக்களுக்கு நலம் வேண்டியும் விஷேட வழிபா...
மூன்றாவது டோஸ் தடுப்பூசியை பெற்றதன் பின்னர் ஏற்படும் சிறிய நோய் அறிகுறிகள் தொடர்பில் அச்சமடையத் தேவை...