நூற்று நாற்பதாயிரம் மில்லியன் ரூபா திறைசேரி உண்டியல்கள் ஏலம் – மத்திய வங்கி அறிவிப்பு!
Saturday, June 3rd, 2023
ஒரு இலட்சத்து 40 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 7 ஆம் திகதி ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 65 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும்,
182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 30 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும்,
364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 45 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அரசில் இருந்து விலகுவேன் – அர்ஜுன ரணதுங்க!
வடக்கின் சுகாதார அமைச்சு பாராமுகம்: நெடுந்தீவு பிரதேச நோயாளர்கள் அவதி!
புதிய புகையிரத கட்டணங்கள் இன்று முதல் அமுல்!
|
|
|


