நீர்கொழும்பு வைத்தியசாலையில் தற்காலிக பிரிவுகள்!
Wednesday, July 5th, 2017
இலங்கை இராணுவத்தின் பொறியியலாளர் படை பிரிவினால் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு டெங்கு நோயாளர்களுக்காக இரண்டு புதிய தற்காலிக வைத்தியவிரிவுகளை நிர்மாணித்துள்ளது.
நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வைத்திய அதிகாரிகளினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
மேலும், இதற்குத் தேவையான மருத்துவ உதவிகளை வளங்குவதற்கு இராணுவ மருத்துவ படைப்பிரிவின் 25 இராணுவ வீரர்கள் செயற்பட உள்ளதாகவும், மின்சாரம் மற்றும் மெக்கானிக்கல் பொறியியலாளர் பணியகத்தினால் சேலைன் வழங்குவதற்கு நிறுத்தி வைக்க பயன்படுத்தும் கம்பிகள் மற்றும் மருத்துவ உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன. இதேவேளை இத்திட்டத்தில் இரத்தப்பரிசோதனைக்காக பிரத்தியேக ஆய்வுகூடம் ஒன்றும் சேர்க்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
ஆசிரியர், அதிபர் வேதன பிரச்சினை தொடர்பில் ஆராய ஐவர் அடங்கிய குழு நியமனம்!
நாட்டை வீழ்த்துவதே போராட்டக்காரர்களின் பிரதான நோக்கம் - வீடுகளை எரித்தவர்கள் நாடாளுமன்றுக்கு வருகைத...
வெள்ளை அறிக்கையை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் நாட்டுக்கு சிறப்பான கல்வி முறையொன்று கிடைக்கும் - ஜ...
|
|
|


